×

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் நடமாடும் படையப்பா யானை: கிராம மக்கள் அச்சம்

கேரளா: கேரளா மாநிலம் மூணாறு குடியிருப்பு பகுதியில் படையப்பா யானை சுற்றி திரிந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறி காலை மற்றம் மாலை நேரத்தில் கேரளமாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சாலைகளில் படையப்பா யானை நடமாடி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இவ்வாறு செய்து வருவதால் அப்பகுதிமக்களுக்கு யானை பரிட்சயம் ஆகிவிட்டது. கடந்த 2 நாட்களாக தேயிலை தோட்டத்தின் அருகே தொழிலாளர்களுக்கான குடியிருப்பு பகுதியில் படையப்பா யானை நடமாடி வருகிறது. வீடுகளின் அருகே உள்ள பலா மற்றும் மாமரங்கள் கிளைகளை முறித்து இலைகளை சாப்பிட்டு வருகிறது.

ஒரு வித அச்சம் இருந்தாலும் யானையை பார்ப்பதற்கு மக்கள் கூடி வருகின்றனர். யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள வனத்துறை பொதுமக்கள் யானையின் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் நடமாடும் படையப்பா யானை: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Padayappa ,Munnar, Kerala ,Kerala ,Badayappa ,Munnar ,Dinakaran ,
× RELATED மூணாறில் உலாவும் காட்டு எருமைகள் மலைக்கிராம மக்கள் பீதி