×

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் இடத்தை கணித்த இஸ்ரோ!

பெங்களூரு: சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது.

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர், நிலவின் தென்துருவத்தின் எந்த பகுதியில் தரையிறங்க வேண்டும் என்பது தொடர்பாக, இஸ்ரோவின் சார்பில் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் சந்திரயான் 3 லேண்டர், போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கிற்கிடையே நிலவின் தென்பகுதியில் தரையிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் தென்துருவத்தின் எந்த பகுதியில் தரையிறங்க வேண்டும் என்பது தொடர்பாக லெண்டரில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

தற்போது லேண்டர் தரையிறங்கும் இடம் கணிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டர் தரையிறங்கும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 கட்டங்களாக நிலவில் தரையிறங்கும் நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவங்க உள்ளது.

The post சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் இடத்தை கணித்த இஸ்ரோ! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Chandrayaan 3 ,Boguslavski ,Mancinus ,
× RELATED சூரியனின் படத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1