×

அரங்கிற்கு வெளியே பயங்கரம் மல்யுத்த வீராங்கனை, சகோதரர் சுட்டுக் கொலை

சோனிபட்: அரியானா மாநிலம், சோனிபட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் தேசிய மல்யுத்த போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நிஷா தஹியா என்ற  இளம் வீராங்கனையும், அவருடைய  தாயாரும், சகோதரரும் வந்திருந்தனர். அரங்கிற்கு வெளியே இவர்கள் இருந்தபோது, திடீரென அங்கு வந்த மர்ம கும்பல், அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டது. இதில் நிஷாவும், அவருடைய சகோதரர் சூரஜும் பலியாகினர். இவர்களின் தாயார் துப்பாக்கி குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கொல்லப்பட்ட நிஷா சமீபத்தில் பெல்கிரேடில் சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கொல்லப்பட்ட நிஷா வேறு நபர் என்றும், பெல்கிரேடில் பதக்கம் வென்றவர் வேறு நிஷா என்றும் அவருடைய பயிற்சியாளர் வீடியோ மூலம் உறுதி செய்தார். பின்னர், கொல்லப்பட்ட நிஷா, சோனேபட்டில் உள்ள ஹலால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்று விசாரணையில் உறுதியானது….

The post அரங்கிற்கு வெளியே பயங்கரம் மல்யுத்த வீராங்கனை, சகோதரர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Sonipat ,National Wrestling Tournament ,Sports Arena ,Sonipat, Ariana ,Nisha ,
× RELATED இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது: தமிழ்நாடுஅரசு