×

ஜி-20 மாநாடு… செப்டம்பர் 7-ம் தேதி அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை: வெள்ளை மாளிகை தகவல்..!!

வாஷிங்டன்: ஜி-20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-ம் தேதி அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார். 2023-ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார். 4 நாட்கள் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுவில்வியன் உறுதி படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இந்தியாவின் டெல்லிக்கு செல்கிறார். அங்கு ஜனாதிபதி பைடன் மற்றும் ஜி-20 பிரிதிநிதிகள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள். சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உக்ரைனில் புதினின் போரின் பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களைக் குறைத்தல் மற்றும் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது, உலக வங்கி, உலக சவால்களை எதிர்கொள்வது உட்பட, வறுமையை சிறப்பாக எதிர்த்துப் போராடுவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜி-20 மாநாடு… செப்டம்பர் 7-ம் தேதி அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை: வெள்ளை மாளிகை தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : G-20 Summit ,US President Joe Biden ,India ,White House ,Washington ,US President ,Joe Biden ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...