×

உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது… டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முன்னிலை: பிரதமர் மோடி பெருமிதம்

தென் ஆப்பிரிக்கா: உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தெற்கு நாடுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஜோகனஸ்பெர்க் என்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.

இதனையடுத்து பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவதாக அவர் கூறினார். டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும் இங்குள்ள தெரு ஒர கடைகளில் கூட யு.பி.ஐ. வசதி இருப்பதாகவும் மோடி கூறினார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறைகளும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுவதாக தெரிவித்த பிரதமர் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தெற்கு உலக நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும் என்று கூறினார்.

The post உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது… டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முன்னிலை: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,South Africa ,Narendra Modi ,
× RELATED ஒன்றிய அரசின் கொள்கைகளால்...