×

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர்.

வங்ககடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. நாகை அருகே நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 24 மீனவர்களை கத்தி, கம்பி, கட்டையால் கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் பாஸ்கர், அருள்ராஜ், அருள்வேலவன், சுப்பிரமணி, வெற்றிவேல், செந்தில், மருது, வினோத் ஆகிய 8 மீனவர்கள் காயமடைந்தனர். மேலும் படகுகளில் இருந்த வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள், வாக்கி டாக்கி, திசைகாட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட், செல்போன் மற்றும் ஒரு மீனவர் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண்கயிறு ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டு 5 பைபர் படகுகளில் கடற்கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

இந்நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Nagai district ,Vedaranyam ,Nagai ,Kodiakkarai ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...