அராரே: ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் (49) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 1993ல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஹித் ஸ்ட்ரீக் அறிமுகமானார். சக வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜிம்பாப்வே கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49 வயதில் புற்றுநோயால் காலமானார். பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மே மாதம் ஹீத் ஸ்ட்ரீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று காலமானார்.
189 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் 239 விக்கெட்டுகள், 2942 ரன்கள் எடுத்தார். 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் 216 விக்கெட்டுகள், 1990 ரன்கள் எடுத்தார். ஸ்ட்ரீக் 1997 முதல் 2002 வரையிலான ஜிம்பாப்வேயின் முன்னணி வீரராக திகழ்ந்தார். அவர் மொத்தம் 4,933 ரன்கள் எடுத்தார் மற்றும் இரண்டு வடிவங்களிலும் 455 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
“உங்களுடன் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. எனது பந்துவீச்சு ஸ்பெல் முடிவடையும் போது மறுபுறம் சந்திப்போம்,” என்று ஸ்ட்ரீக்கின் முன்னாள் சக வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஹென்றி ஒலோங்கா மைக்ரோ-பிளாக்கிங் தளமான எக்ஸ்-இல் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் தற்போதைய ஜிம்பாபர் கேப்டனும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய வீரரான அஸ்வின், ஹீத் ஸ்ட்ரீக்க்கு தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அஞ்சலி செலுத்தினார். மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
The post புற்றுநோய் காரணமாக ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் (49) உயிரிழப்பு appeared first on Dinakaran.