×

மதுரை அதிமுக மாநாட்டில் முதல்வர், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு; நெல்லை போலீசில் எடப்பாடி மீது புகார்: திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணியினர் மனு

நெல்லை, ஆக. 23: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் முதல்வர், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை மாநகர போலீசில் நெல்லை மத்திய, கிழக்கு மாவட்ட, மாநகர திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணியினர் புகார் அளித்துள்ளனர். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் குறித்து மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் அநாகரிகமான முறையில் உண்மைக்கு மாறாக தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் நோக்கில் பாடல் பாடியுள்ளனர்.

எனவே இந்தப் பாடல் பாடிய பாடகர், அதை ரசித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதாவிடம் நெல்லை மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளரும், நெல்லை மண்டல தலைவருமான மகேஸ்வரி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மண்டல தலைவர்கள் தச்சநல்லூர் ரேவதி பிரபு, மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, மானூர் யூனியன் சேர்மன் லேகா அன்பழகன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் பேச்சியம்மாள், துணை அமைப்பாளர் வள்ளியம்மாள், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அன்னராஜ், தச்சை மகேஷ், வட்டப் பிரதிநிதி அபே மகேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இதேபோல நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் ஆலோசனைப்படி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா தலைமையில் அளித்த மனுவில், முதல்வர், அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் மீது அநாகரிகமான முறையில் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதை முன்வரிசையில் அமர்ந்து அதிமுகவின் அனைத்து தலைவர்களும் கை தட்டி சிரித்தனர். இதனை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்து மன வேதனை ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே வேண்டும் என்றே பாட்டுப் பாட வைத்து அதை ரசித்த எடப்பாடி பழனிச்சாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், பாடலை பாடிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார். மாவட்ட துணைச் செயலாளர் கிரிஜாகுமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சவுந்திரம், பவானி ராஜ்குமார், வக்கீல்கள் ராஜா முகம்மது, மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றனர்.

நெல்லை கிழக்கு மா வட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனைப்படி, மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜெனிபர் தினகர் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில், முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, ஆ.ராசா எம்பி ஆகியோரை அவதூறாகவும், அநாகரிகமாகவும் பாட்டுப்பாடி விமர்சித்த வி.கதிரவன், அதனை கைதட்டி சிரித்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா, தலைவர் ஜெயமாலதி, மகளிரணி துணைத் தலைவர் சந்திரகலா, துணை அமைப்பாளர் பரிமளம், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் சரோஜா, அனுராதா, வள்ளி, கவுரி, கஸ்தூரி, வள்ளியூர் ஒன்றிய மகளிரணி அஜந்தா மற்றும் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வ சூடாமணி, மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் உடன் சென்றனர்.

நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, நெல்லை மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சவுந்திரம் முத்துராஜ், மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மேரி, மாவட்ட மகளிரணி தலைவி பத்மா, மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பிந்து, ஆனி ராக்லண்ட், மாநகர மகளிர் அணி தலைவர் ஜோஸ் வனிதா, மாநகர சமூக வலைத்தள பொறுப்பாளர் ஸ்டெர்லி மற்றும் ஏஞ்சலின் ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் குறித்தும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி, ஆ.ராசா எம்பி ஆகியோரை பற்றி அவதூறாக பாடல் பாடியவர் மீதும், அதை ரசித்த எடப்பாடி பழனிச்சாமி மீதும்,

கூட்டத்தை ஏற்பாடு ெசய்தவர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பகுதி செயலாளர்கள் நெல்லை பேட்டை நமச்சிவாயம் கோபி, பாளை. ஆன்டன் செல்லத்துரை, வழக்கறிஞர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி வேங்கை வெங்கடேஷ், தச்சை பகுதி துணைச் செயலாளர் ஸ்டார் முருகன், தொழிலாளர் அணி மாநகர அமைப்பாளர் பெப்சி சரவணன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மை பிரிவு சேக் மைதீன், திமுக நிர்வாகிகள் ஷெட்டி, பெரியார், அப்பாத்துரை, ரகுமான், சேக் மைதீன், மீன் கனி, சேக் அலி, யாசின், திமுக வழக்கறிஞர்கள் சண்முகசுந்தர், முருகன், பிரேம்குமார், சதீஷ், வினோத், பாலகுரு, அன்னராஜா, சிவ சுடலை மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

The post மதுரை அதிமுக மாநாட்டில் முதல்வர், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு; நெல்லை போலீசில் எடப்பாடி மீது புகார்: திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணியினர் மனு appeared first on Dinakaran.

Tags : Madurai AIADMK convention ,Chief Minister ,Udayanidhi Stalin ,Edappadi ,Nellie Police ,DMK ,Paddy ,Udhayanidhi Stalin ,AIADMK convention ,Madurai ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் அரசு, இன்னும் பல...