×

நெடுங்குளத்தில் சாலையோர அபாய கிணறு மூடல்: பஞ். நிர்வாகம் நடவடிக்கை

சாத்தான்குளம், ஆக. 23: நெடுங்குளத்தில் சாலையோரம் அபாய நிலையில் இருந்துவந்த கிணறு, தினகரன் செய்தி எதிரொலியாக மூடப்பட்டது. சாத்தான்குளம் யூனியன், நெடுங்குளத்துக்கு முன்பாக சாலையோரத்தில் அபாய நிலையில் கிணறு ஒன்று இருந்து வந்தது. மேலும் இக்கிணற்றில் மணல் பாதி நிரம்பி 6 அடி பள்ளம்போல் காணப்பட்டது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருவோர் எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிடும்போது நிலை தடுமாறி இந்த கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவியது. இதனால் இப்பகுதி மக்கள், மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,

இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி அபாய நிலையில் உள்ள சாலையோர கிணற்றை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்த கோரிக்கை செய்தி தினகரனில் கடந்த 19ம் தேதி படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து நெடுங்குளம் பஞ். நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை எடுத்து அபாய நிலையில் இருந்த கிணற்றை மணலை கொட்டி மூடினர். இதை வரவேற்றுள்ள பொதுமக்கள், நடவடிக்கை எடுத்த நெடுங்குளம் பஞ். நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post நெடுங்குளத்தில் சாலையோர அபாய கிணறு மூடல்: பஞ். நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nedungulam ,Panj. ,Satanakulam ,Dhinakaran ,Satankulam Union ,Panj. Administration ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியில் காவிரி நீரை...