×

ஆக.29ம் தேதி கொடியேற்றம் சென்னையில் இருந்து புதுவை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் நடைபயணம்

 

புதுச்சேரி, ஆக. 23: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கொடியேற்றம் வருகிற 29ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக நாகைக்கு பக்தர்கள் சாரை சாரையாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருத்தல பெருவிழா வருகிற 29ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இதில் வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்தாண்டும் வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றத்தில் பங்கேற்க தமிழக முழுவதும் இருந்து பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நேர்த்தி காணிக்கை வேண்டியிருந்த பக்தர்கள் வெகு தொலைவிலிருந்து இப்போதே வேளாங்கண்ணிக்கு நடைபயணத்தை தொடங்கி விட்டனர். அவ்வாறு சென்னையில் இருந்து புறப்பட்ட வேளாங்கண்ணி பக்தர்கள் தற்போது புதுச்சேரியை கடந்து கடலூர் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இசிஆர் சாலை, திண்டிவனம் மார்க்கமாக வந்த பக்தர்கள் சாரை சாரையாக கால்நடையாக நடந்து ஆரோக்கிய மாதா திருத்தலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களை புதுச்சேரியில் கிறிஸ்தவ அமைப்பினர் வரவேற்று நீர்மோர், அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள இதய ஆண்டவர் பசிலிக்கா, அரியாங்குப்பம் ஆரோக்கிய மாதா உள்ளிட்டவற்றில் ஓய்வெடுத்து செல்லும் பக்தர்கள் செப்டம்பர் முதல்வாரத்தில் நாகை சென்றடைகின்றனர். 29ம்தேதி வேளாங்கண்ணில் நடைபெறும் கொடியேற்றத்தில் பங்கேற்று அன்னையின் ஆசி பெற்று திரும்புகின்றனர்.

The post ஆக.29ம் தேதி கொடியேற்றம் சென்னையில் இருந்து புதுவை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் நடைபயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Velankanni ,Puduvai Margam ,Puducherry ,Velankanni Arogya Mata ,Puduvai ,
× RELATED ரூ.150 கோடி போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது