×

விபத்தில் பார்வை இழந்தவரின் ரூ6 கோடி சொத்து அபகரிப்பு

சேலம், ஆக.23: சேலம் அல்லிக்குட்டை பக்கமுள்ள வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் தியாகு(எ)தியாகராஜன்(43). விபத்தில் கண் பார்வையை இழந்த இவர், நேற்று மனைவி கிருபாலட்சுமியுடன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், விபத்தல் சிக்கி கண்பார்வை இழந்ததால் செலவிற்காக வாய்க்கால்பட்டரையை சேர்ந்த குமரவேல் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கினேன். இவ்வாறு பணம் பெற்றதில் கடனும் வட்டியும் சேர்த்து ₹10 லட்சம் வரை வந்தது. இதற்காக எனது மனைவியின் பெரில் உள்ள 28 சென்ட் நிலத்தை அடமானமாக எழுதி கொடுக்குமாறு கேட்டனர்.

நாங்கள் அடமான பத்திரம் என நினைத்திருந்தோம். ஆனால் அது கிரய பத்திரம் என்பது தெரியாமல் போனது. எங்களை ஏமாற்றி குமரவேலின் மனைவி அமுதாவின் பெயருக்கு சொத்துக்களை எழுதிக்கொண்டனர். அந்த சொத்தின் மதிப்பு ₹6 கோடி இருக்கும். இதுகுறித்து கேட்டதற்கு கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் பார்வை இழந்தவரின் ரூ6 கோடி சொத்து அபகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Thiaku(a) Thiagarajan ,Waikalpattara ,Salem Allikoot ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு