
பரமக்குடி, ஆக.23: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, தமிழகத்தில் அரசு சார்பில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் தொடங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும், இதுவரை பயிற்சி தொடங்கப்பட வில்லை.
ஆர்வமுள்ள மாணவர்களிடம் இருந்து இதுவரை பெயர் பட்டியல் கூட பெறப்பட வில்லை. வழக்கமாக ஜூலை மாதம் முதல் நீட்பயிற்சி வகுப்புகள் தொடங்கும் நிலையில், விரைந்து பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, சென்ற ஆண்டைப் போல், இம்முறையும் தமிழ்நாடு அரசு சார்பில் செப்டம்பரில் நீட்பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post நீட்பயிற்சி வகுப்புகள் துவக்க கோரிக்கை appeared first on Dinakaran.