×

கும்பாபிஷேக விழா

அரூர், ஆக.23: அரூர் அடுத்த தென்கரைகோட்டை ஐயப்பன் நகரில் புதியதாக கட்டப்பட்ட விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி முதல் நாள் நிகழ்ச்சியில் கங்கணம் கட்டுதல், சக்தி அழைத்தல், முளைப்பாறி எடுத்து வருதல், பால்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மறுநாள் கரகம்புறப்பாடு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோயில் கலசங்களுக்கு புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kumbabhishek ceremony ,Aroor ,Kumbabhishekam ,Vinayagar ,Mariamman temple ,Ayyappan ,Tenkaraikot ,Aroor.… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி