×

இன்று மக்கள் தொடர்பு முகாம்

 

கமுதி, ஆக.23: கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில், இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக கமுதி வட்டாட்சியர் சேதுராமன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும் போது, கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி கிராமத்தில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பாக்குவெட்டி, கருங்குளம், பேரையூர் பசும்பொன் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம் என கமுதி வட்டாட்சியர் சேதுராமன் தெரிவித்தார்.

The post இன்று மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Baguvetti ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்ட தியாகி மரணம்