×

பெரம்பலூர் மாவட்டத்தில் ஐடிஐ.யில் நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீடிப்பு

பெரம்பலூர்,ஆக.23: பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடிச் சேர்க்கை வரும் 31ம் ேததி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2023ம் ஆண்டிற்கு சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும், ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலி இடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

காலி இடங்கள் மிகக் குறைவாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 சேர்க்கை கட்டணம். ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ185. இரண்டு வருடம் தொழிற் பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195. சேர்க்கையின்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் : 8ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ், போட்டோ-3 ஆகியவைகளை எடுத்து வரவும்.இணையதளம் வாயிலாக (www.Skilltraining.tn.gov < http://www.skilltraining.tn.gov/ >) அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்திலேயே நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதிவரை காலஅவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மின்னஞ்சல் முகவரி gitiperambalur @gmail.com http:gmail.com, 94990 55881 மற்றும் 94990 55852 என்ற எண்ணிலும், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மின்னஞ்சல் முகவரி gitialathurpera லத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மின்னஞ்சல் முகவரி gitialathurperambalur @gmail.com < http://gmail.com/ >, 94990 55883 என்றஎண்ணிலும், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மின்னஞ்சல் முகவரி gitikunnam@gmail. com, 90479 49366 என்ற எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பெரம்பலூர், மின்னஞ்சல் முகவரி gitialathurperambalur @gmail.com http:gmail.com, 94884 51405 என்றஎண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் ஐடிஐ.யில் நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,YK ,Perambalur ,Training Stations ,IDI ,Yakaran ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு