
பெரம்பலூர்,ஆக.23: பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையவர் கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட பதவிகள் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான ஒப்பந்த தொகுப்பூதிய பணி நியமனம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு எண் W.P.No7420/2020ன் நீதி மன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.
நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் தொகுப்பூதியம் :1-பாதுகாப்பு அலுவலர், (நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் நிறுவனம் சாரா பராமரிப்பு) , 2பதவிகள், ஒரு மாதத்திற்கான தொகுப்பூதியம் ரூ27,804. 2-சமூகப்பணியாளர் 2 பதவிகள், ஒரு மாதத்திற்கான தொகுப்பூதியம் ரூ.18536.3-புறத்தொடர்பு பணியா ளர், 2 பதவிகள், ஒரு மாதத்திற்கான தொகுப்பூதியம் ரூ10,592.பாதுகாப்பு அலுவலர் (நிறு வனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் நிறுவனம் சாரா பராமரிப்பு) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலையில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் வளர்ச்சி, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலையில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் வளர்ச்சி, மனித உரிமை பொது நிர்வாகம், உளவியல்,மனநலம், சட்டம், பொதுசுகாதாரம், சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அதனுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, சமூக நலத்துறையில் திட்டங்கள் உருவாக்கம், அமலாக்கம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது 2023 ஆக-1ம் தேதியின்படி 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சமூகப்பணியாளர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சமூகப்பணி, சமூகவியல், சமூகஅறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தை நலன் சார்ந்த பணியில் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் கணினியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது 2023 ஆக-1ம் தேதியின் படி 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் புறத்தொடர்பு பணியாளர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். புறத்தொடர்பு பணியில் தகவல் தொடர்பு திறன் கொண்டவர். புறத்தொடர்பு பணியில் முன்அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது 2023 ஆக-1ம் தேதியின்படி 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.https: perambalur.nic.in http:perambalur.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வருகிற செப்.1 மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண் 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர்-621212. என்ற முகவரிக்கு அனுப்பி வைக் குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.