
- கலைஞர் நூற்றாண்டு விழா
- குண்டூர்
- திமுக
- டாக்டர்
- பாலு எம்.பி.
- அமைச்சர்
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- Thiruverumpur
- திருச்சி தென் மாவட்டம் திமுக
- திருவெரும்பூர்
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூர், ஆக. 23: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் அருகே குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும். பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 100 அடி கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் அருகே குண்டூர் துப்பாக்கி தொழிற்சாலை வளைவு அருகே 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடியேற்று விழா, ஆய்வரங்கம் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக பொருளாளரும் பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலைஞரின் நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்து 100 அடி கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். அங்கு அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் வாழ்நாள் சாதனைகள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது.
இதில் திராவிட இயக்க தமிழ் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளுநர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர். இந்த விழாவில் எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கங்காதரன் வரவேற்றார். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
The post குண்டூரில் கலைஞர் நூற்றாண்டு விழா; 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடி: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றி வைத்தனர் appeared first on Dinakaran.