×

கார் மோதி 7 ஆடுகள் சாவு

 

திருச்சுழி, ஆக.23: திருச்சுழி அருகே கார் மோதி 7 ஆடுகள் உயிரிழந்தன. மூன்று ஆடுகள் படுகாயமடைந்தன. திருச்சுழி அருகே உள்ள கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் சென்னையன்(60). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு விட்ட பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி சாலையை கடக்க முற்படும் போது கமுதியை சேர்ந்த வேல்முருகன் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. 3 ஆடுகள் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீசில் சென்னையன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கார் மோதி 7 ஆடுகள் சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,
× RELATED திருச்சுழி அருகே கல்லூரணியில் 700...