×

அயர்லாந்துடன் இன்று 3வது டி20 ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, டப்ளின் மலாஹைடு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் டிஎல்எஸ் விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 2வது போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றுக் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி வரிந்துகட்டுகிறது. முதல் 2 போட்டியிலும் களமிறங்காத ஆவேஷ் கான், ஜிதேஷ் ஷர்மா, ஷாபாஸ் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். தொடரை ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காக அயர்லாந்து அணியும் முனைப்பு காட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இந்தியா: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிரிஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

* அயர்லாந்து: பால் ஸ்டர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், ஃபியான் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பாரி மெக்கார்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வோயர்கம், பென் ஒயிட், கிரெய்க் யங்.

The post அயர்லாந்துடன் இன்று 3வது டி20 ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,T20I ,Ireland ,Dublin ,T20 ,Malahide Stadium, Dublin ,Dinakaran ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து