×

முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், சென்னையில் நாளை தொடங்குகிறது. 94வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், சென்னையில் நாளை தொடங்கி செப்.3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கான ரொக்கப் பரிசு கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம், பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். சிறப்பாக செயல்பட்டு விருது பெறும் 5 வீரர்களுக்கு அதிநவீன சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், எம்சிசி மற்றும் முருகப்பா குழும நிர்வாகிகள் இத்தகவலை தெரிவித்தனர்.

The post முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Murugappa Gold Cup Hockey ,Chennai ,Murugappa Gold Cup ,All India MCC ,Murugappa Gold ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...