×

இன்று ஒப்பந்தம் கையெழுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் சச்சின்

புதுடெல்லி: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தேர்தல்களில் வாக்காளர்களை கவர்ந்து, அவர்களை ஆர்வமுடன் வாக்களிக்க தூண்டும் வகையில் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் டோனி, நடிகர் அமீர்கான், மேரிகோம் உள்ளிட்டோர் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டனர். தற்போது வர இருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேசிய அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

டெண்டுல்கருக்கும், தேர்தல் குழுவுக்கும் இடையே இதுதொடர்பாக இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் 3 வருடம் உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,’ வரவிருக்கும் தேர்தல்களில் குறிப்பாக 2024 பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க இளைஞர்களுக்கு டெண்டுல்கர் இணையற்ற தாக்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்து உள்ளது.

The post இன்று ஒப்பந்தம் கையெழுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் சச்சின் appeared first on Dinakaran.

Tags : Sachin ,Election Commission of India ,New Delhi ,Sachin Tendulkar ,Election Commission ,Dinakaran ,
× RELATED 39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...