
கொடைக்கானல்: கொடைக்கானல் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பேத்துப்பாறை பகுதி விவசாயிகள் தெரிவித்ததாவது: இப்பகுதியில் பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக அரசு அனுமதியை மீறி ெபாக்லைன் இயந்திரத்தால் சாலை அமைத்து வருகிறார். மற்றொரு நடிகர் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வருகிறார். விவசாயிகள் விளைநிலங்களை பொக்லைன் கொண்டு மட்டப்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆனால் இங்கு அனுமதியின்றி 24 மணிநேரமும் பொக்லைனை இயக்கி வேலை செய்து வரும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?என்றனர். அதற்கு ஆடிஓ, ‘‘அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post பிரபல நடிகர்கள் விதிகளை மீறி கட்டிட பணி செய்ததாக புகார்: கொடைக்கானல் விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.