×

வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியது.. கார்ல்சனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதல்..!!

அஜர்பைஜான்: 10வது உலகக்கோப்பை செஸ் தொடரில், நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் – பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கியது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது.

அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் இதன் மூலம் படைத்துள்ளார். இந்நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் – பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளார்.

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வரலாறு படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகின் முதல்நிலை வீரரான கார்ல்சனை தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா 5 முறை வீழ்த்தியுள்ளார். இறுதிச் சுற்று இரு ஆட்டங்களை கொண்டதாகும்; போட்டி சமன் ஆனால் டை பிரேக்கருக்கு நகரும். 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

The post வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியது.. கார்ல்சனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Chess World Cup ,Nadu ,Carlson ,Azerbaijan ,10th World Cup Chess Series ,Norway ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...