×

மழை, வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப், அரியானாவில் பதற்றம்

சண்டிகர்: மழை, வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு கோரி பஞ்சாப், அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியதால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் பெய்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு தொகை வழங்கக் கோரி 16 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், இன்று அரியானா-பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள அம்பாலா அடுத்த ஷம்பு பகுதியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

நடவடிக்கையாக பஞ்சாபின் ராஜ்புரா, சண்டிகர், அமிர்தசரஸ், தர்ண் தரண் ஆகிய எல்லைகளில் விவசாயிகள் ஒன்றிணைவதை தடுக்க மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாய அமைப்புகள் கூறுகையில், ‘பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.50,000 கோடி வழங்க வேண்டும். பயிர் இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், சேதமடைந்த வீட்டுக்கு ரூ.5 லட்சமும், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

 

The post மழை, வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப், அரியானாவில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Ariana ,Chandigarr ,
× RELATED டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும்...