×

புரட்சி பாரதம் கட்சி மாநில செயலாளர் ஆர்.சரவணன் இல்ல புதுமனை புகுவிழா: பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ வாழ்த்து

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பூவை ஆர்.சரவணன் – எஸ்.ராதிகா ஆகியோர் பூந்தமல்லி அடுத்த மேப்பூர்தாங்கலில் புதியதாக கட்டியுள்ள வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி நேரில் சென்று வாழ்த்தினார். அவருக்கு அம்பேத்கரின் உருவ சிலையை நினைவு பரிசாக வழங்கினர். விழாவில் பனிமலர் கல்வி குழும தாளாளர் பி.சின்னதுரை, பழனிபோகர் புலிப்பாணி கருவழி வாரிசு சிவானந்த புலிப்பாணி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன், விருகை வி.என்.கண்ணன், பாமக நிர்வாகிகள் வ.பாலயோகி, நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் பூவை எம்‌.ஜெயக்குமார், நடிகர் சாய் தீனா, திருச்சி பிரபாகர், புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் முகிலன், எம்.மாறன், பா.காமராஜ், மணவூர் ஜி.மகா, வலசை எம்.தர்மன், வியாசர்பாடி ப.சிகா, என்.முரளி, வி.அசோக், கே.எஸ்.ரகுநாத், கே.சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை பி.வீரமணி, பூவை ஆர்.சரவணன், எஸ்.ராதிகா சரவணன், எஸ்.கார்த்திகேயன், எஸ்.லித்திக் ரோஷன், ஆர்.வேலாயுதம், காந்த், எஸ்.செந்தில்குமார், காஞ்சிபுரம் பாலாஜி, ஆர்.சங்கர் ஆர்.இளங்கோவன், ஆர்.குமரேசன், ஆர்.தங்கரதம் ஆகியோர் வரவேற்றனர்.

The post புரட்சி பாரதம் கட்சி மாநில செயலாளர் ஆர்.சரவணன் இல்ல புதுமனை புகுவிழா: பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Pradachi Bharatham Party ,State Secretary ,R. Saravanan ,M. Jagan Murthy ,MLA ,Poo. ,Tiruvallur ,State Secretary of ,Revolution Bharatham Party ,S. Radhika ,Poontamalli ,Maypurthangal ,
× RELATED மார்க்சிஸ்ட் செயலாளர் அறிவுறுத்தல்...