×

பாரிமுனை செல்போன் கடையில் உளவுத்துறை அதிரடி சோதனை

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் உள்ள செல்போன் கடையில் உளவுத்துறை மற்றும் கியூபிரிவு போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரில் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, சென்னை ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் என்பவருடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதனடிப்படையில், ஒன்றிய உளவுத்துறை மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசார் இணைந்து சென்னை பாரிமுனை 2வது கடற்கரை சாலையில், மன்சூரின் செல்போன் கடையில் நேற்று சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து சோதனை நடந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெங்களூரில் கைதான இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர் கொடுத்த தகவலின்பேரில் பாரிமுனையில் உள்ள மன்சூரின் செல்போன் கடையில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இவர்களுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவருக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தினோம். முழு விசாரணைக்கு பிறகுதான் உண்மைநிலை தெரியும்” என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாரிமுனை கடை வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பாரிமுனை செல்போன் கடையில் உளவுத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Barimuna ,Thandaiyarpet ,Parimuna ,
× RELATED இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை...