×

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளை மேற்கொள்ள சச்சின் டெண்டுல்கர் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ரங் பவன் ஆடிட்டோரியத்தில் அவரை தேசிய அடையாளம் ஆக அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்து ஆகிறது.

The post தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Sachin Tendulkar ,Election Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...