×

ஒரு ஆண்டுக்கு பிறகு இந்தியா-நேபாளம் இடையே பேருந்து

சிலிகுரி: கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து ஒரு ஆண்டுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே நேற்று மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா – நேபாளம் இடையேயான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பேருந்து இயக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது, கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்து இருப்பதாலும், பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாலும் இந்த பேருந்து சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து 45 இருக்கைகள் கொண்ட பேருந்து காத்மண்ட் நோக்கி புறப்பட்டது. பேருந்தில் பயணம்  செய்த பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள். இது மட்டுமின்றி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பேருந்தில் பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு பயணிக்கான டிக்கெட் விலை ரூ.1,500. இந்தியா – நேபாளம் இடையே பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் சுற்றுலா துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post ஒரு ஆண்டுக்கு பிறகு இந்தியா-நேபாளம் இடையே பேருந்து appeared first on Dinakaran.

Tags : India ,Nepal ,Siliguri ,
× RELATED வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது