×

இயற்கை அழகில் இளமை குறையாமல் விளங்கும் போடிமெட்டு மலைச்சாலையை அகலப்படுத்த வேண்டும்

*சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

போடி : போடி அருகே போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் இசட் சாலையை அகலப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சிமலை வரிசையில் தமிழகம் மற்றும் கேரள பகுதியினை இணைக்கும் போடி மெட்டு மலைச்சாலை அடுக்காக உயர்ந்து செல்கிறது. போடிமெட்டு மற்றும் குரங்கணி மலை அடிவாரத்தில் முந்தல் மலை கிராமத்திலிருந்து துவங்கி 21வது கிலோ மீட்டர் தொலைவில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் போடி மெட்டு மலைச்சாலை உயர்ந்த மலையாக இருக்கிறது.

விவசாயிகள் இரு மாநில பொது மக்களின் வேண்டுகோள் கோரிக்கை ஏற்று போடி எம்எல்ஏவாக இருந்த சுப்புராஜ் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1955க்கு மேல் ஏலம், காப்பி, தேயிலை போன்ற பல தரப்பட்ட விவசாயிகளுக்கும், இரு மாநில உறவுகள் பலபடவும், அனைத்து வர்த்தகத் தொடர்புகளுக்கும் நீடிக்கவும், முழுக்க முழுக்க மனிதர்களை கொண்டே மலையில் பாறைகள் வெட்டியும், 7 ஆண்டுகளில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் குறுகிய மலைச்சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையினை அப்போதைய முதல்வராக இருந்த காமராஜ் போடிக்கு வருகை தந்து இந்த மலைச் சாலையினை பழைய மதுரை மாவட்ட மக்களுக்கும், கேரளா உட்பட பல மாநிலம் வெளிநாடு வாழ் மக்களும் துவக்கி அர்ப்பணித்தார். இச்சாலை துவங்கியதிலிருந்து இரு மாநிலங்களுக்கிடையே உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. போக்குவரத்தும், வர்த்தகமும் மேம்பட்டு உலகளவில் உயர்ந்துள்ளது.

அதே வேகத்தில் படிப்படியாக விவசாயிகள் அதிகரித்து தமிழகப்பகுதி உட்பட இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் அளவில் ஏலத்தோட்ட விவசாயமும் மற்ற பயிர்கள் நிலப்பரப்புகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த மலைச்சாலை 1962ம் ஆண்டு இரு மாநில மக்களுக்கும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டு பல்வேறு கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பலதரப்பட்ட வாகனங் களின் வாயிலாக போக்குவரத்தாக இயங்கும் இந்த அடுக்கு மலையாக உள்ள இசட் சாலைக்கு 61 வயதை தொட்டுள்ளது.

இச்சாலையில் அடிக்கடி ஜீப், பஸ், லாரி, டூவீலர்கள் என அதிக அளவு கடப்பதால் குறுகிய சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகளும் நடந்து வந்தன. இதனையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 2004 உட்பட இரண்டு கட்டங்களாக பதிவேடு கொண்டை ஊசி வளைவுகளிலும் குறுகிய சாலைகளில் பாறைகள் உடைத்து ஏழு மீட்டராக விரிவாக்கம் செய்து தற்போது உயர்ந்த பாலங்கள் தடுப்புச் சுவர்கள் என கட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து தமிழ்நாடு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை அறிவித்து பணிகள் முழுவதும் தீவிரமாக நடந்தது. இதில் பாறைகள் குடைந்து உயர்ந்த தடுப்பு சுவர்கள், பாலங்கள் விரிவாக்கம் 8 வருடங்களாக தொடர்ந்து பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலாப் பயணிகளும் அதிகரித்திருப்பதால் விவசாயிகளும், தொழிலாளர்களும் மேலும் பல்வேறு பணிகளுக்கு செல்வதாலும் போடிமெட் மலைச்சாலையில் உள்ள 21 கிலோ மீட்டர் தூரத்தினை இன்னும் மேம்படுத்தி பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண் டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரவேற்கும் மேகக்கூட்டங்கள்

போடிமெட்டு மலைச்சாலை புலியூத்திலிருந்து துவங்கி தோண்டிமலை வரையிலுமே தொடர்ந்து மேகக்கூட்டங்கள் குவிந்து கிடந்து வரவேற்பதால் வாகனங்கள் அனைத்துமே பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே பயணத்தை ரசித்தபடி தொடர்கின்றனர். சுற்றுலாப்பயணிகள் இச்சாலை கடக்கும் போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட அருவிகளில் முன்பாக நின்று செல்பி மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டும் தங்களின் மனதில் இருக்கும் கஷ்டங்களை பறக்க விட்டு சந்தோஷமாக மகிழ்ச்சியாக கடக் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இயற்கை அழகில் இளமை குறையாமல் விளங்கும் போடிமெட்டு மலைச்சாலையை அகலப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Bodimetu Hill Road ,Z road ,Bodi ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு