×

கொல்லங்கோடு நகராட்சியில் சாலையில் தெருவிளக்கு அமைக்காததால் அவதி

*கலெக்டருக்கு காங். மனு

நித்திரவிளை : கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் தெருவிளக்கு அமைக்கவும், புதர்களை அகற்றவும் கோரி கொல்லங்கோடு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபின் கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொல்லங்கோடு நகராட்சி 2வது வார்டு பகுதி பாத்திமாபுரம் – கிள்ளிகுளம் -காக்கவிளை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலையோரம் மின்கம்பங்கள் நடப்பட்டு அதில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்த மின்கம்பங்களில் இரவு நேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இந்த பகுதி வழியாக இரவு வேளையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதுபோல் இதே சாலையின் இருபக்கமும் புதர் மண்டி விஷ ஜந்துக்கள் வசிக்கும் கூடாரமாக காணப்படுகிறது.

இது சம்பந்தமாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறிய பிறகும் தெருவிளக்க மாட்டவும் இல்லை, புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் இல்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின் கம்பத்தில் புதிதாக தெருவிளக்கு அமைக்க வேண்டும், சாலையோரம் வளர்ந்து நிற்கும் புதர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post கொல்லங்கோடு நகராட்சியில் சாலையில் தெருவிளக்கு அமைக்காததால் அவதி appeared first on Dinakaran.

Tags : Kollangode Municipality ,Manu Nithiravila ,Kollangode ,Municipality ,Awadi ,Dinakaran ,
× RELATED செம்மண் கடத்திய டெம்போ சிக்கியது