×

“மலையாளிகள் டீக்கடை நிலவிலும் இருக்கும் என்ற காமெடி அது”: சந்திரயான் 3 தொடர்பான பதிவு குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்..!!

சென்னை: சந்திரயான் 3 தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் இருந்து முதல் படம் அனுப்பியதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படம் என கூறி நடிகர் பிரகாஷ் ராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில், தனது பதிவு குறித்து விளக்கம் அளித்திருக்கும் பிரகாஷ் ராஜ், மலையாளிகளின் டீ கடை நிலவில் கூட இருக்கும் என்ற ஆம்ஸ்ட்ராங் காலத்து காமெடியை மட்டுமே தாம் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வுடன் பார்த்தால் வெறுப்பு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அவர் குறிப்பிட்ட காமெடி வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. பிரகாஷ் ராஜிக்கு ஆதரவாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

The post “மலையாளிகள் டீக்கடை நிலவிலும் இருக்கும் என்ற காமெடி அது”: சந்திரயான் 3 தொடர்பான பதிவு குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Prakash Raj ,Chandrayaan ,Chennai ,
× RELATED “கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” : நடிகர் பிரகாஷ்ராஜ்