![]()
சென்னை: ஹே சந்திரயான் நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
நேரம் நெருங்க நெருங்க
மூளைக்குள் வட்டமடிக்கிறது
சந்திரயான்
நிலவில் அது
மெல்லிறக்கம் கொள்ளும்வரை
நல்லுறக்கம் கொள்ளோம்
லூனா நொறுங்கியது
ரஷ்யாவின் தோல்வியல்ல;
விஞ்ஞானத் தோல்வி
சந்திரயான் வெற்றியுறின்
அது இந்திய வெற்றியல்ல;
மானுட வெற்றி
ஹே சந்திரயான்!
நிலவில் நீ மடியேறு
நாளை நாங்கள் குடியேற என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஹே சந்திரயான் நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற: கவிஞர் வைரமுத்து ட்வீட் appeared first on Dinakaran.
