×

காவிரி பிரச்னையில் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை: முதல்வருக்கு கோரிக்கை

கும்பகோணம், ஆக. 22: காவிரி பிரச்னையில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் உழவர்களாகிய நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழ்நாட்டின் முதல்வர் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே சமயத்தில் நாளை மறுநாள் (நாளை) கர்நாடக அரசு அரசியல் கட்சியினரையும், விவசாய சங்க தலைவர்களையும் அழைத்து அடுத்த கட்டம் குறித்த அவரச ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளனர்.

அதேபோல தமிழ்நாடு அரசு காவிரி சமவெளி மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, காவிரி பிரச்சனையில் அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலேசானை கூட்டத்தை நடத்த வேண்டும். அப்போது கூட்டத்தில் பெறப்படும் கருத்துக்களை பெற்று, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காவிரி பிரச்னையில் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை: முதல்வருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kaviri Prachna ,CM ,Kumbakonam ,Association ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி