×

ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 22: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பார்த்தீபன், சம்பத், பாலாஜி உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ள ஒன்றிய அரசு.

அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணைச் சட்டம், இந்திய சாட்சியை சட்டம் என இந்த மூன்றின் பெயரையும் சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துக்களில் பல்வேறு சரத்துக்களை புதிதாக திணித்துள்ளதால், ஒன்றிய அரசின் இந்த அரசியல்அமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களின் கருத்துக்களை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 40 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Union Govt. ,District Court ,Karur Dandonimalai ,Union Government ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...