×

சாணார்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து: கறிக்கடைக்காரர் கைது

 

கோபால்பட்டி, ஆக. 22: சாணார்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜீவா (21). சென்னையில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாணார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கறிக்கடைக்காரர் அஜ்மீர்கான் (23).என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் நடந்த திருவிழாவில் சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாணார்பட்டி டாஸ்மாக் மதுபான கடையில் ஜீவாவிற்கும், அஜ்மீர்கானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜ்மீர்கான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த ஜீவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே தப்பியோடிய அஜ்மீர்கானை நேற்று அதிகாலை நத்தம் போலீசாரிடம் பிடிபட்டார். இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

The post சாணார்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து: கறிக்கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Chanarpatti ,Gopalpatti ,Jiva ,Chanarpatti Kaliamman Koil Street ,Chennai ,
× RELATED சாணார்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் காயம்