×

பர்கூர் மலைப்பகுதியில் நடமாடும் ரேஷன் கடை

 

அந்தியூர், ஆக.22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளது. குறிப்பாக பர்கூர் ஊராட்சியில் உள்ள அடர்ந்த மலை கிராமங்களான சின்ன செங்குளம், பெரிய செங்குளம் பகுதி மக்கள் கோயில் நத்தம் நியாய விலை கடையிலும், கிழக்கு மலையில் உள்ள எலச்சிபாளையம், வெள்ளிமலை, எப்பத்தாம்பாளையம் கிராம மக்கள் தேவர்மலை நியாய விலை கடையிலும் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருவர்.

பல கிலோமீட்டர் தொலைவில ரேஷன் கடைகளுக்கு பொருட்களை நேரில் சென்று வாங்குவதில் சிரமம் உள்ளதாகவும், இதனால் மலை கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தங்கள் வசிப்பிடங்களுக்கே கொண்டு வந்து விநியோகிக்க வேண்டுமென எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை நிறைவேற்றும் வகையில் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வாரத்தில் ஒரு நாள் இந்த மலை கிராமங்களுக்கு வாகனத்தில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் அனைத்து ரேஷன் பொருட்களையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை எடுத்து நடமாடும் நியாயவிலைக்கடைகளின் சேவையை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் ரேஷன் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில் கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினர் புட்டன் உள்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

The post பர்கூர் மலைப்பகுதியில் நடமாடும் ரேஷன் கடை appeared first on Dinakaran.

Tags : Barkur hills ,Andhiyur ,Erode district ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...