
கோவை,ஆக.22: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்றிரவு கோவை மேற்கு மண்டலம் 34ம் வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் ஐயுடிஎம் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 920 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாநகர பொறியாளர் சுகந்தி, செயற் பொறியாளர் சுந்தர ராஜ், உதவி செயற் பொறியாளர் ஹேமலதா,உதவி பொறியாளர் ஹாரி பிரசாத்,மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post 34ம் வார்டில் சாலை பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.