×

தீபாவளிக்கு பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

 

மதுரை, ஆக. 22: மதுரையில் வரும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப மனு அளிக்கலாம் என்று மதுரை நகர் காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறி இருப்பதாவது: வரும் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாக கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விதி எண் 84ல், கூறப்பட்ட விதிமுறைகளின்படி AE-5 என்ற படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வரும் செப்.21ம் தேதி பகல் ஒரு மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப மனு, ரூ.2க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் AE-5 மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தேவையான ஆவணங்களுடன் செப்.21ம் தேதி அன்று பகல் ஒரு மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அதன் பிறகு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, சாலையோர கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளிக்கு பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai, Ga. 22 ,diwali ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது