×

வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை வழிபாடு

ராமநாதபுரம், ஆக.22: ஆவணி மாத வளர்பிறை நாக சிறப்பு பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வளர்பிறை நாக பஞ்சமியை முன்னிட்டு சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது.
மஞ்சள், வெற்றிலை, வேப்பிலையை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மன் காப்பு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. பொதுமக்கள் மஞ்சள் அறைத்து, அம்மனுக்கு காப்பு செலுத்தி வழிபட்டனர்.நூற்றுக்கான பெண்கள் வேண்டுதலுக்காக வெண்பூசணி, தேங்காய், மண் சட்டி நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.

The post வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Varahi Amman Temple ,Ramanathapuram ,Thiruuttarakosamangai ,Panchami ,
× RELATED திருஉத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா தேரோட்டம்