×

இளையான்குடி அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

இளையான்குடி, ஆக.22: இளையான்குடி அருகே கரைக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சித்தி விநாயகர் மற்றும் காளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் 11 மணி வரை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு கும்ப பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, நடைபெற்றது.

காலை 9.48 மணியளவில் தர்ம முனீஸ்வரர் கோயிலில் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கரைக்குடி, நடுவலசை, மெய்யனேந்தல், கீழாயூர், காந்தி சாலை, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொன்டு சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். மதியம் பன்னிரண்டு மணியளவில் கரைக்குடி கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

The post இளையான்குடி அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kaliyamman ,Temple ,Kumbabhishek ,Ilayayankudi ,Siddhi Ganesha ,Kaliamman ,Karaikudi ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு