×

14 நாளுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற அமலிநகர் மீனவர்கள்

உடன்குடி, ஆக. 22: திருச்செந்தூர் அமலிநகரில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவு பாலம் அமைத்திட சட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் பணிகள் தொடங்கப்படாத நிலையில், தூண்டில் வளைவு பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கடந்த 16ம் தேதி மதியம் முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில் கடந்த 14 நாட்களுக்கு பிறகு அமலிநகர் மீனவர்கள் நேற்று அதிகாலை பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்று கரைக்கு திரும்பினர். அமலிநகர் மீனவர்களின் வலைகளில் பாறை, விளா, சீலா மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post 14 நாளுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற அமலிநகர் மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Amalinagar ,Udengudi ,Thiruchendur Amalinagar ,Assembly ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது