×

மாணவனை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

ெசன்னை: யானைக்கவுனி, அண்ணா பிளாக் தெரு, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராகேஷ் ஆனந்த் (18), கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 18ம் தேதி சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆனந்தை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த ராகேஷ் ஆனந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, திருத்தணி தாலுகாவை சேர்ந்த பூபதி (19), ஆகாஷ் (19), ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி (20) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

The post மாணவனை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rakesh Anand ,Anna Block Street ,Perumal Koil Street ,Yanikauni ,
× RELATED சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை...