×

மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை

 

ஆவடி: ஆவடி மின்வாரியத்திற்கு உட்பட்ட சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி. கொடிகளை அகற்றவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி ஸ்ரீராம் நகர் குடியிருப்பில் சுமார் 3000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. பழமையான இந்த மின் கம்பத்தை சுற்றிலும் கீழிருந்து மேல் பகுதி வரை செடி, கொடிகள் படர்ந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பிகள் மீது செடிகள் உரசியபடியே செல்கின்றன.

இதனை அகற்ற மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அண்மையில் பெய்த மழை காரணமாக செடி, கொடிகள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக செல்கின்றன. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அந்தவழியாக செல்லும்போது அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தின் அருகில் உள்ள செடி, கொடிகளை அகற்றவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Aavadi Power Board ,Dinakaran ,
× RELATED ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றம்