×

பேரம்பாக்கம் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருவள்ளூர்: பேரம்பாக்கம் கிராமத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜிவ் காந்தியின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திவாகர் சுயம்பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளித்தனர்.

மேலும் கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாநிலச் செயலாளர் அஷ்வின் குமார், மாவட்ட துணைத் தலைவர் ஆசீர்வாதம், இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கங்கை குமார், எஸ்சி.எஸ்டி மாநில பொதுச் செயலாளர் விநாயகம், மாவட்ட செயலாளர் தீனதயாளன், மாவட்ட தலைவர் தனஞ்செழியன், தொகுதி தலைவர் சுரேந்தர், மாவட்ட துணைத் தலைவர் வினோத், கலை, பசுபதி, சுரேஷ், பிரேம், மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் பரிசோதனை செய்து கொள்ள வந்த 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

The post பேரம்பாக்கம் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Perambakkam ,Tiruvallur ,Youth Congress ,Perambakkam village ,Dinakaran ,
× RELATED கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது