×

மணலிக்கரை

குமாரபுரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் மணலிக்கரை வாழவிளை முக்கு சந்திப்பில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சேவா தள காங்கிரஸ் தலைவர் ராபர்ட் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி தக்கலை வட்டார தலைவர் ஜெபினோ, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியவேல், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சேவா தள மாநில பொதுச் செயலாளர் குமரி அந்தோணி முத்து கலந்து கொண்டார். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.

The post மணலிக்கரை appeared first on Dinakaran.

Tags : Manalikarai ,Kumarapuram ,Rajiv Gandhi ,Congress ,Padmanabhapuram Assembly Constituency ,Dinakaran ,
× RELATED ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன்...