
ஆவடி: விசாரணைக்கு அழைத்து சென்ற மகன் மீது வழிப்பறி வழக்கு போட்டதால் தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி புதுநகர் 3வது தெருவை சேர்ந்த சௌந்தரி(59). இவரது மகன் பிரபு(34) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள்(7) ஒரு மகன்(6) உள்ளனர். பிரபு ஒரு கொலை வழக்கில் 65 நாள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பிரபுவை ஆவடி காவல் நிலையம் அழைத்துவந்தனர். இதையறிந்த சௌந்தரி மற்றும் மருமகள் இருவரும் அம்பத்தூரில் உள்ள இணை ஆணையரிடம் முறையிட்டனர். அவர், அதிகாரிகளிடம் பேசி விட்டேன் பிரச்சனை ஒன்றுமில்லை, நீங்கள் காவல் நிலையம் செல்லுங்கள். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்’ என்று உறுதி அளித்தார். அதன் பேரில் மீண்டும் காவல் நிலையம் வந்தனர். இவர்கள் நீண்டநேரம் காத்திருந்த நிலையில், பிரபு மீது வழிப்பறி வழக்கு போடப்பட்டது.
அதிர்ச்சியடைந்த பிரபுவின் தாயார் சௌந்தரி காவல் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்தில் கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து இடது கையில் மூன்று இடத்தில் அறுத்துக் கொண்டார். மீண்டும் கழுத்தில் அறுத்துக் கொண்டார். இதை பார்த்து காவலர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் சௌந்தரிவுக்கு கையில் நான்கு தையல்கள் போடப்பட்டன கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. ஆவடியில், காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று கூறிய நிலையில், அவர் சொல்லை மீறி போலீசார் நடவடிக்கை எடுத்ததால் பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மகன் மீது வழக்கு போட்டதால் தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.