×

சார்-பதிவாளர் ஆபீசில் ரெய்டு

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள வின் நகரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாற போவதாக லஞ்சஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அந்த அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புதுறையினர் அந்த பணத்தை கைப்பற்றினர். மேலும், சார்-பதிவாளர் அலுவலகத்தில் துவரங்குறிச்சி பொறுப்பு பதிவாளர் இந்துகுமார் (40) உள்பட சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

The post சார்-பதிவாளர் ஆபீசில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Sub-Registrar's ,Tiruverumpur ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி ரவுடி என்கவுன்டர் எதிரொலி...