×

புரட்சி என்ற பெயருக்கே அர்த்தமில்லை ‘துரோக தமிழர்’ பட்டம் எடப்பாடிக்கு தரலாம்: டிடிவி.தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தஞ்சாவூரில் அளித்த பேட்டி: ஓபிஎஸ்சும் நானும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்து இருக்கிறோம். வருங்காலத்தில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். எடப்பாடி பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல. இது பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு. மாநாட்டில் அதிகபட்சமாக 2 முதல் 2.5 லட்சம் பேர் தான் பங்கேற்று இருப்பார்கள். புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுத்ததன் மூலம் புரட்சி என்ற பெயருக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. வேண்டுமென்றால் துரோகத் தமிழர் என பட்டம் கொடுக்கலாம். பாஜவுடன் எனக்கு எப்போதுமே உறவு கிடையாது. நண்பர்கள் இருக்கிறார்கள் அவ்வளவு தான். கூட்டணி என்று இருந்தால் அது தேசியக் கட்சியுடன்தான் இருக்கும். தனித்து இருந்தால் நாங்கள் தான் தலைமை. காவிரி ஆணையத்தின் தீர்ப்பையே மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்கிறது கர்நாடகம். தமிழக முதல்வர் நீதிமன்றத்தை அணுகி உடனடியாக தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிஏஜி அறிக்கையின்படி ஒன்றிய அரசில் ஊழல் நடந்திருந்தால் அதற்கு எதிராக மக்கள் தீர்ப்பளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post புரட்சி என்ற பெயருக்கே அர்த்தமில்லை ‘துரோக தமிழர்’ பட்டம் எடப்பாடிக்கு தரலாம்: டிடிவி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,DTV.Thinakaran ,Thanjavur ,AAMUK ,General ,DTV ,Dinakaran ,OPS ,
× RELATED கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்