
- அதிரடி பெரியார் பல்கலை
- ஓமலூர்
- கல்வித்துறை
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- பெரியார் பல்கலைக்கழகம்
- தின மலர்
ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்வியியல் துறை மூலம் எம்.எட்., முதுநிலை ஆசிரியர் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதில், 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்த்துறை தலைவராக உள்ள பெரியசாமியே, கல்வியியல் துறைக்கும் தலைவராக உள்ளார். இந்த துறையில் நாச்சிமுத்து (58) என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் மீது நிதி மோசடி, பணியில் கவனமின்மை, சரியாக வகுப்புகள் எடுப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்ததில், புகாரில் உண்மை தன்மை இருப்பது தெரியவந்தது. வரும் 25ம் தேதி பேராசிரியர் நாச்சிமுத்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து பதிவாளர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.
The post முறைகேடு புகார்; ஓய்வு நாளில் அதிரடி பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.