×

இந்தியா கூடுதல் வரி விதித்தால் நாங்களும் விதிப்போம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு இந்தியாவில் அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2019ல் டிரம்ப் அதிபராக இருந்த போது இந்தியாவை வரிகளின் மன்னன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியாவின் முன்னுரிமை சந்தை அணுகலை ரத்து செய்தார். இந்நிலையில், பாக்ஸ் பிஸினெஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் அடுத்தாண்டு தேர்தலில் மீண்டும் அதிபரானால், அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தால், அமெரிக்காவும் அப்படியே விதிக்கும். இதனை பழிவாங்குவதாக நினைத்து கொண்டாலும் பரவாயில்லை, என்று கூறினார்.

The post இந்தியா கூடுதல் வரி விதித்தால் நாங்களும் விதிப்போம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப் appeared first on Dinakaran.

Tags : India ,Trump ,WASHINGTON ,USA ,Harley Davidson ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்